தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில்  நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த ஆளுனர் வருகை விழாவில் பட்டய தலைவர் ஜெகதீசன் பேசினார்.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கத்தார் கல்வி உதவித்தொகை மற்றும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில், மாவட்ட ஆளுநர் வருகை விழா, பட்டய தலைவர் ஜெகதீஷ், சங்க தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடந்தது. செயலர் அறிக்கையை செயலர் கதிர்வேல் வாசித்தார். கடந்த ஆண்டு நடந்த இலவச கண்சிகிச்சை , பொது மருத்துவம், ரத்ததானம், பல் சிகிச்சை உள்ளிட்ட முகாம்கள் பட்டியலையும், இந்த ஆண்டு நடத்தவுள்ள முகாம்கள் பட்டியலையும் செயலர் ராஜ்குமார் சமர்ப்பித்தார்.

அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சரண்யா, சவும்யா உள்ளிட்ட மாணவ, மாணவிக ளுக்கு விருது மற்றும் கல்வி உபகரணங்கள், கல்வி உதவி தொகை, ஆதரவற்றோர் மையத்திற்கு அரிசி மூட்டைகள், அங்கன்வாடி மையங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், தட்டுகள், மின்விசிறிகள், பாய்கள் மற்றும் தலையணைகள் உள்ளிட்ட பொருள்களை மாவட்ட ஆளுநர் தமிழ்மணி வழங்கினார். இதில், மாவட்ட உணவு வழங்கல் நிர்வாகி சண்முகசுந்தரம், அமைச்சரவை செயலர் தில்லை நடராஜன், நிர்வாக அலுவலர் வேலு, வட்டார தலைவர் செந்தில்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக 24 மனை மாரியம்மன் கோவிலில் மாவட்ட ஆளுனர் தமிழ்மணிக்கு கோவில் நிர்வாகத்தினர் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.







Tags

Next Story
ai in future agriculture