டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்க ரத்த தான முகாம்

டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்க ரத்த தான முகாம்
X

குமாரபாளையம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

குமாரபாளையம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

குமாரபாளையம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

குமாரபாளையம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. சங்க தலைவர் தனபால் தலைமை வகித்தார். இதில் டாக்டர் ஹர்ஷித் பங்கேற்று ரத்த தானம் பெற்றார். இதில் ரத்த வகை கண்டறிதல், ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. சின்னப்பநாயக்கன்பாளையம், பெராந்தர்காடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, பாரதி நகர், நடராஜா நகர், காந்திபுரம், விட்டலபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பெருமளவில் முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர். இதில் 72 பேர் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு பாரட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செயலர் பிரபு, பொருளர் விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கத்தார் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையம் அருகே கத்தேரி ஊராட்சியில் தளபதி லயன்ஸ் சங்கத்தார் சார்பில் சங்க தலைவர் தனபால் தலைமையில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. ஈரோடு அரசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு கண் சிகிச்சை குறித்த ஆலோசனைகள் வழங்கினர். இதில் பங்கேற்ற 120 பயனாளிகளில் 68 பேர் ஐ.ஓ.எல். பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். கத்தேரி ஊராட்சி தலைவி தமிழ்செல்வி, துணை தலைவி கவிதா, சங்க நிர்வாகிகள் பிரபு, விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. கண்ணில் புரை உண்டாகுதல், மாறு கண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், நீர் வடிதல், கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு 68 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். மாத்திரைகள், ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.


Tags

Next Story
ai in future agriculture