குமாரபாளையம் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் ஆய்வு

குமாரபாளையம் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் ஆய்வு
X

குமரபாளையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் கோவில் நிலத்தை ஆய்வு செய்யும் திருத்தொண்டர்கள் நிறுவனர் ராதாகிருஷ்ணன்.

குமாரபாளையம் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை திருத்தொண்டர்கள் நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலத்தை ஆய்வு செய்த திருச்சபை தொண்டர்கள் நிறுவனர் ராதாகிருஷ்ணன் அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆக்கிரமிப்பிள்ள 10லட்சம் ஏக்கர் இடத்தை தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.


தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழக அரசுடன் திருத்தொண்டர்கள் சபையினர் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மன்னர்கள் காலத்தில் வழிபாடு செய்து வந்ததாக கூறப்படும் அப்பராயர் சத்திரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தினை திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தி பார்வையிட்டார்.

அப்போது கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட வரும் குடியிருப்பு கட்டுமான பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார். இதன் பின்னர், கோவில் செயல் அலுவலரிடம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளவர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்,

தமிழகத்தில் கோவில் நிலத்தை ஆக்கரமிரப்பு செய்துள்ளது குறித்து பொதுமக்கள் மத்தியில் தற்போது விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கி விட்டது. அதனால், ஆக்கிரமிப்பாளர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 10லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கோவில் சொத்துக்கள் அனாதையாக கிடக்கின்றன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


12ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் ஓரே இடத்தில் இருந்து வந்தால் அந்த இடத்திற்கு உரிமை கோரலாம் என்று கூறும் சிவில் சர்வீஸ் சட்டம் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பொருந்தாது. இதனால் ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இந்து அறநிலையத்துறையின் கீழ் 4.75 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. தமிழக அரசு 10லட்சம் ஏக்கர் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் வருவாய் துறையினர்,காவல்துறையினர், இந்து அறநிலையத்துறையின் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!