தென் மண்டல இறகு பந்து போட்டியில் குமாரபாளையம் மாணவி முதலிடம்

தென் மண்டல பாலிடெக்னிக் கல்லூரிக்கு இடையேயான இறகு பந்து போட்டியில் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவி கவுசிகா முதலிடம் பெற்றார்.
தென் மண்டல அளவிலான இறகு பந்து போட்டியில் குமாரபாளையம் மாணவி முதலிடம் பெற்றார்.
4வது அனைத்திந்திய தென் மண்டல பாலிடெக்னிக் கல்லூரிக்கு இடையேயான இறகு பந்து போட்டி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மகளிர் அணி பிரிவில் விளையாடிய குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவி கவுசிகா முதல் பரிசை வென்றுள்ளார்.
இந்த போட்டியில், தமிழ்நாடு இறகுபந்து அணியின் மேலாளராக குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் டாக்டர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் பங்கேற்ற அணி முதல் பரிசை வென்றது. வெற்றி பெற்ற மாணவி கவுசிகாவையும், உடற்கல்வி இயக்குனர் கோகுலகிருஷ்ணனையும் கல்லூரி தலைவர் இளங்கோ, துணை தலைவர் ஈஸ்வர், தாளாளர் புருஷோத்தமன், முதல்வர் பாலமுருகன் உள்பட பலர் பாராட்டினர்.
இறகு பந்து போட்டி குறித்து மூத்த வீரர்கள் கூறியதாவது: இறகுப் பந்து விளையாட்டினை பிரிட்டானிய இராணுவ வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் அறிமுகம் செய்தனர். இவ்விளையாட்டினை 1873 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் ப்யூபர்ட் பிரபுவின் கிராமப் பகுதியான “பாட்மிண்டன்” எனும் இடத்தில் ஆடப்பட்டதால் இந்த விளையாட்டை ஆங்கிலத்தில் “பாட்மிண்டன்” என்று அழைத்தனர். இது ஒரு மட்டைப் பந்தாட்ட வகை விளையாட்டு. இதில் பூக்குவளை போல் இருக்கும் இறகுகளால் ஆன பந்தை (ஷட்டில்காக்), இறுக்கமாக பின்னிய வலை மட்டையால் (ராக்கெட் ) வலைக்கு மேலாக போய் எதிர்த்தரப்பு ஆடுகளத்துக் குள் விழுமாறு அடித்து விளையாடும் ஒரு விளையாட்டாகும் இறகுப் பந்தாட்டத்தின் ஆடுகளம் ஒற்றையர் ஆடுகளம், இரட்டையர் ஆடுகளம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒற்றையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 5.18 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line) இருக்க வேண்டும். தரையிலிருந்து வலையின் உயரம் 5 அடி இரண்டு பக்கங்களிலும் 5 அடி 1 அங்குலம் என்பதாக இருக்க வேண்டும்.
இரட்டையர் ஆடுகளத்திற்கான நீளம் 13.40 மீட்டர், அகலம் 6.10 மீட்டர் கொண்டிருக்கும். மையக் கோட்டிலிருந்து ஒவ்வொரு பக்கத்திலும் 1.98 மீட்டர் நீளத்திற்கு குறுகிய பந்து போடும் கோடு (Short Service Line)இருக்க வேண்டும். இரண்டு பக்கங்களின் பின் கோட்டிற்கு உட்புறம் 76 செ.மீக்கு இரட்டையருக்கான நீள பந்து போடும் கோடு இருக்க வேண்டும். (பக்கக் கோட்டிற்கு உட்புறம் இரண்டு பக்கங்களிலும் 46 செ.மீ க்கு ஒற்றையருக்கான பக்கக் கோடு இருக்க வேண்டும்.
இறகுப் பந்தின் எடை 4.73 கிராம் முதல் 5. 50 கிராம் வரை இருக்கலாம். இறகுகள் 14 முதல் 16 வரை இருக்கலாம். பந்தின் விட்டம் 1 முதல் 1 1/8 அங்குலம் கார்க்கின் மேல் இருக்கும். நீளம் 2 1/2 முதல் 2 3/4 அங்குலம் வரை இருக்கலாம்.மட்டையின் உயரம் 26 முதல் 27 அங்குலம் வரையும், விட்டம் 8 முதல் 9 அங்குலம் வரையும் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu