குமாரபாளையம் தெற்கு நகர திமுக அலுவலகத்தை திறந்து வைத்த மாவட்ட செயலர்

குமாரபாளையம் தெற்கு நகர திமுக அலுவலகத்தை திறந்து வைத்த மாவட்ட செயலர்
X

குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவில், மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்று ரிப்பன் வெட்டி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தி.மு.க. அலுவலகம் மேற்கு காலனி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு நகர பொறுப்பாளர் மற்றும் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

தெற்கு நகர நிர்வாக பணிகளை கவனிக்க அலுவலகம் இல்லாத நிலையில், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் வசம் அனுமதி பெற்று, தற்போது செயல்பட்டு வரும் கட்சி அலுவலகத்தில் ஒரு பகுதியை, கட்சி பணிகள் மேற்கொள்ள அலுவலகம் அமைத்துக்கொள்ள அனுமதி வேண்டினார்.

இதற்கு மாவட்ட செயலர் மதுரா செந்தில், மூத்த நிர்வாகிகள் ஆலோசனைப்படி, தெற்கு நகர அலுவலகம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கினார். குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நகர தெற்கு பொறுப்பாளர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பணிகள் துவக்கி வைத்தார்.

மாநில தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட பொருளர் ராஜாராம், முன்னாள் நகராட்சி தலைவர் ஜகந்நாதன், கவுன்சிலர் தர்மராஜ், பேச்சாளர் அன்பழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் நாச்சிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மகளிரணி ராதிகா, தேவிமணி, நிர்வாகிகள் செந்தில், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு