குமாரபாளையத்தில் கபசுர குடிநீர் வழங்கல்

X
கபசுர குடிநீர் வழங்கல் (மாதிரி படம்)
By - K.Madhavan, Chief Editor |20 April 2021 12:01 PM IST
குமாரபாளையத்தில் சேவை நிறுவனம் கப சுர குடிநீர் வழங்கியது.
குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் என்ற சமூக சேவை அமைப்பு அதன் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கபசுர குடிநீர் வழங்க திட்டமிட்டது.
அதன்படி குமாரபாளையம் வாரச்சந்தை முன், அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு,இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பள்ளிபாளையம் பிரிவு ரோடு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் முன்புறம், காவேரி நகர் போன்ற இடங்களிலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் பிரபு, பழனிசாமி, வரதராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu