குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு
X
சித்தரிப்பு படம்
குமாரபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், வாலிபர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காலனி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, கோழி இறைச்சி கடையில் பணியாற்றி வந்தவர் ஸ்ரீகாந்த், 25. இவரது சொந்த ஊர் ஓசூர் என்று கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான், இந்த கடையில் பணியில் ஸ்ரீகாந்த் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், இரவு 11:00 மணியளவில் வட்டமலை தனியார் கல்லூரி எதிரில், சேலம் -கோவை புறவழிச் சாலையை நடந்து கடந்துள்ளார். அப்போது, சேலம் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில், ஸ்ரீகாந்த் படுகாயமடைந்து, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!