பெண்களை ஆபாசமாக சித்தரித்த நபரை போக்சோவில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பெண்களை ஆபாசமாக சித்தரித்த நபரை போக்சோவில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
X

பெண்களை ஆபாசமாக சித்தரித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி ஊர் பொதுமக்கள் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்த நபரை போக்சோவில் கைது செய்யக்கோரி குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பெண்களை ஆபாசமாக சித்தரித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டி ஊர் பொதுமக்கள் குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீ. மேட்டூர் பகுதியில் வசிப்பவர் முருகேசன்(, 32.) தனியார் நிதி நிறுவன பணியாளர். இவர் அவரது கிராமத்து பெண்கள் பலரை போட்டோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் ஆபாசமாக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ஜீவா(32,) என்பவர் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்படி காவல் ஆய்வாளர் தவமணி, புகார் கூறப்பட்ட முருகேசன்(32) என்பவரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த வீ.மேட்டூர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் காவல் நிலையம் முன்பு திரண்டு, குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆய்வாளர் தவமணி நேரில் வந்து, சட்டத்திற்கு உட்பட்டு கைது செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

காலை முதல் இரவு வரை ஊர் பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டு இருந்தனர். தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.



Tags

Next Story
ai in future agriculture