ஆதரவற்றவர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கிய காவல் ஆய்வாளர்
குமாரபாளையம் பாசம் மைய ஆதரவற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் தவமணி வேட்டி, சேலைகள் வழங்கினார்.
குமாரபாளையம் ஆதரவற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் வேட்டி, சேலைகள் வழங்கினார்.
குமாரபாளையம் காவல்துறையின் பிரண்ட்ஸ் ஆப் போலீசில் பணியாற்றிவர் மதன்( 58.). இவர் தற்போது பள்ளிப்பாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் உள்ளிட்ட போக்குவரத்து மிகுந்த பகுதிகளில், மக்கள் கூட்டம் அதிகம் சேரும் நேரங்களில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து வருகிறார். இவரது ஏற்பாட்டின் பேரில், குமாரபாளையம் ராஜம் தியேட்டர் பின்புறம் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் செயல்படும் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் இலவச வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மையத்தின் அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி பங்கேற்று, ஆதரவற்ற 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேட்டிகள், சேலைகள் வழங்கி வாழ்த்தினார். அங்குள்ள முதியவர்கள் ஒவ்வொருவரிடமும் அங்கு வந்து சேர்ந்த கதையை கேட்டு, தேவையானால் சொல்லுங்கள், உங்கள் குடும்பத்துடம் சேர்த்து வைக்க உதவி செய்கிறேன் என்று ஆதரவாக கூறினார். மையத்திற்கு தேவையான உதவிகளை செய்யவும் தன்னால் ஆன உதவிகளை செய்வதாக கூறினார். மேலும் அனைவருக்கும் அன்னதானம வழங்கினார்.
காவல் ஆய்வாளர் தவமணி கூறியதாவது:பிள்ளைகள் தங்கள் பெற்றோரை தங்கள் வாழ்நாள் முழுதும் கண் போல் காக்க வேண்டும். அவர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. அவர்கள் ஆசியால்தான் பிள்ளைகளின் வாழ்க்கை மேன்மை பெறும். பெற்றோர்களுக்கு உணவு தராமல், நிர்கதியாக விடுவது தவறு. சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.மையத்தின் முதியவர்கள் காவல் ஆய்வாளர் தவமணியிடம் மனம் விட்டு பேசினர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu