குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா விழிப்புணர்வு பேனர்

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில்   கொரோனா விழிப்புணர்வு பேனர்
X

கொரோனா விழிப்புணர்வு (மாதிரி படம் )

குமாரபாளையம் போலீசார் சார்பில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கொரோனா விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குமாரபாளையம் போலீசார் சார்பில் கபசூர பணம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதே போல மற்ற துறைகளும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் குமாரபாளையம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளல், துண்டு பிரசுரம் வினியோகம் செய்தல், மாஸ்க் போடாதவர்களுக்கு அபராதம் விதித்தல், வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ, டெம்போ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு அரசு விதிமுறைப்படி வாகனம் இயக்க அறிவுறுத்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை தடுப்பதற்கு பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியவை குறித்து, போலீஸ் ஸ்டேஷன் முன்பாக விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாஸ்க் அணியாமல் யார் போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்தாலும் போலீசார் உள்ளே அனுமதிப்பதில்லை. குமாரபாளையம் போலீசாரின் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை பலரது பாராட்டை பெற்றுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்