குமாரபாளையம் ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குமாரபாளையம் ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

குமாரபாளையம், ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலசத்திற்கு புனித  நீர் ஊற்றப்படுகிறது.

குமாரபாளையம் ஓம்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் ஓம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடந்தது. குமாரபாளையத்தில் அரசு மருத்துவமனை எதிரே ஓம் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஓம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 23ம் தேதி அன்று கணபதி பூஜையுடன் துவங்கியது.


நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு யாக சாலை பூஜை செய்யப்பட்டன. நேற்று காலை கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று முழு ஊரடங்கு என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளுடன், குமாரபாளையம் நகராட்சி வழிகாட்டுதல்களுடன் நடத்தப்பட்டது.கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!