என்.சி.சி. சார்பில் பிசியோதெரபி தின கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் என்.சி.சி. சார்பில் நடைபெற்ற பிசியோதெரபி முகாம்
தினம் கொண்டாடப்பட்டது.
தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையத்தில் என்.சி.சி. சார்பில் பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பிசியோதெரபி தினம் தலைமையாசிரியர் ஆடலரசு தலைமையில் கொண்டாடப்பட்டது. ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் கமெண்டிங் அலுவலர் கர்னல் ஜெய்தீப், நிர்வாக அலுவலர் கர்னல் அஜய் குட்டினோ, சுபேதார் மேஜர் சுரேஷ் ஆலோசனையின் படி கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு வருடமும் உலக பிசியோதெரபி தினம் செப்டம்பர் 8ல் கொண்டாடப்படுகிறது. சிறப்பு அழைப்பாளர்களாக பிசியோதெரபி டாக்டர் செந்தில்குமார், ஈரோடு 15 வது பட்டாலியனை சேர்ந்த ஹவில்தார் மோகன் ராவ் பங்கேற்றனர். டாக்டர் செந்தில்குமார் மாணவர்களுக்கு பிசியோதெரபி மருத்துவம் முறை அதன் முக்கியத்துவம், முதலுதவி ஆகியன எடுத்துரைத்தார்.
மேலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, வினாடி வினா ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் 50 மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்களும், எழுது பொருட்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி செய்திருந்தார். ஆசிரியர்கள் கவிராஜ், சிவகுமார், கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியாவில் உள்ள 17 என்.சி.சி இயக்குனர்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 16 குழுக்கள் கலந்து கொண்டனர்.
கோவை என்.சி.சி குரூப் இரண்டாமிடம் பிடித்து தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி
இதில் கோவை என்.சி.சி குரூப் இரண்டாம் இடத்தை பிடித்தது தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஈரோடு மற்றும் கோவை பட்டாலியனை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இரண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 4 பதக்கங்களை பெற்றார்கள்.
இப்பதக்கங்களை பெற்ற என்.சி.சி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி அந்தமான் நிக்கோபாரின் டெப்டி டைரக்டர் ஜெனரல் அட்டுல் குமார் ராஸ்டோகி, என்.சி.சி மாணவர்களை கௌரவித்து, வாழ்த்துகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கோவை குரூப் கமாண்டர் மற்றும் ஈரோடு 15 வது பாட்டாலியனின் கமெண்டிங் ஆபிஸர் கர்னல் ஜெய்தீப், சுபேதார் மேஜர் சுரேஷ், ஆகியோர் என்.சி.சி மாணவர்களை வாழ்த்தினார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் தஆடலரசு தலைமை வகித்தார். பி.டி.ஏ.நிர்வாகிகள் வெங்கடேசன், அன்பரசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கார்த்தி, சரவணன், கவிராஜ் , சிவகுமார், தமிழரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சிகள் வழங்கப்படும். இறுதியில் ஏ எனும் தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த சான்றிதழானது மாணவர்களின் உயர்கல்விக்கும் அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும், வழக்கறிஞர் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கும் 5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த தேர்வினை பள்ளியின் தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி ஏற்பாடு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu