குமாரபாளையத்தில் கோடையை குளிர்வித்த மழை: பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி

மழை (மாதிரி படம்)
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வெயில் கடுமையாக வாட்டி வந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வீசியது.
அதனால், பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. குமாரபாளையம் பகுதி முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து விவசாயிகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. காற்று வேகமாக வீசியதால் சில இடங்களில் மழை குறைந்து போய்விட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது. இன்று காலை வரையிலும் கூட வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
தொடர்ந்து வெயில் அதிகமாக இருப்பதால் மழையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோடை மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்வதால் கிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுக்கும். ஆழ்துளை கிணறுகளிலும் நீர் மட்டம் உயரும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu