நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் திமுக நகராட்சி தலைவர் காரசார விவாதம்

நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் திமுக நகராட்சி தலைவர் காரசார விவாதம்
X

குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று பேசினார்.

குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர், தி.மு.க. நகராட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடந்தது

குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர், தி.மு.க. நகராட்சி தலைவர் காரசார விவாதம் நடந்தது.

குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் நடந்த விவாதங்கள் விவரம் பின்வருமாறு:

சரவணன் (ஆணையாளர்): டிச. 8ல் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடக்கவுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர், அமைச்சர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். பல இடங்களில், பல கட்டங்களாக நடக்கும் ஓய்ந்த முகாமினை நகராட்சி தலைவர் துவக்கி வைக்க உள்ளார். பொதுமக்கள் அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டும். நாள், இடம் குறித்த விபரங்கள் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்யப்படும். அனைத்து கவுன்சிலர்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்படும்.

வெங்கடேசன் ( தி.மு.க.துணை தலைவர்):நாராயண நகர், அம்மன் நகர் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தி.மு.க. அரசுக்கும், அதற்காக முயற்சித்த நகராட்சி தலைவருக்கும் நன்றி.

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.):நாராயண நகர், அம்மன் நகர் சாலை பணிக்கு நிதி கிடைக்க உதவிய முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.எல்.ஏ. தங்கமணிக்கு நன்றி.

விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்): உங்கள் முன்னாள் அமைச்சர் என்ன செய்தார்? உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் நடையாக நடந்து, திட்ட மதிப்பீடு கொடுத்து, நிதி பெற்றது நாங்கள். எதுவும் செய்யாத உங்கள் அமைச்சருக்கு நன்றி கூறுவது உண்மையல்ல. வீணாக விளம்பரம் தேடுவது வேண்டாம். தி.மு.க. அரசுதான் நிதி ஒதுக்கீடு செய்தது என அனைவருக்கும் தெரியும்.

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.):அவரும் சட்டமன்றத்தில் அம்மன் சாலை பணிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என பேசி கோரிக்கை வைத்தார். கடந்த ஆட்சி காலத்தில் எங்கள் அமைச்சர் எத்தனையோ பணிகள் செய்து கொடுத்துள்ளார்.

விஜய்கண்ணன் (தி.மு.க. நகராட்சி தலைவர்):நாங்கள் பதவிக்கு வந்து பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட், அறிவுசார் மையம், அப்பன் பங்களா பாலம், உள்ளிட்ட பல வேலைகள் 70 கோடி செலவில் செய்துள்ளோம். நீங்கள் நிதி பெற்று தந்திருந்தால் அதற்கான ஆதாரம் காட்டுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கிய போது கூட அமைச்சர் நேரு உள்ளிட்டவர்கள், இந்த திட்டம் துவங்கியது அ.தி.மு.க. ஆட்சியில்தான். ஆனால் அதை தற்போது நாங்கள் துவக்கி வைக்கிறோம் என்றுதான் கவுரமாக சொன்னார்கள்.

பாலசுப்ரமணி (அ.தி.மு.க.):அப்பன் பங்களா பாலம் கட்ட முன்பே நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் முதன்முறையாக புதைவட மின் பாதை அமைத்தது எங்கள் அமைச்சர்தான்.

விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்):அந்த திட்டம் கொண்டுவந்து தான் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, பொதுமக்களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தோல்வி திட்டம் என்று மின்வாரிய அதிகாரிகள் கூட சொல்கிறார்கள்.

பாலசுப்ரமணி (அ.தி.மு.க):மின்சாரத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், அதனை தடுக்க நல்ல எண்ணத்துடன் துவங்கப்பட்ட இந்த திட்டத்தை குறை சொல்வது சரியல்ல.

( நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தி.மு.க. ஆதரவு கவுன்சிலர்கள் ஜேம்ஸ், வேல்முருகன், ராஜ், தர்மராஜ் உள்ளிட்டவர்கள் புதைவட மின் திட்டத்தினை விமர்சித்து, இதனால்தான் குமாரபாளையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது, மற்ற ஊர்களில் மின் தடை ஏற்படுவது இல்லை, மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தாலும், குமாரபாளையத்தில் மட்டும் மின் தடை அடிக்கடி ஏற்படும் ஊராக மாற, இந்த புதைவட மின் திட்டம்தான் காரணம், என கூறினார்கள்)

ஒரு கட்டத்தில் விஜய்கண்ணன் வெற்றிபெற்றது குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி பேச, ஏன் நீங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டியதுதானே? என்று கேட்டதுடன், வரும் நகராட்சி தேர்தலில் உங்கள் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டுகிறேன், என விஜய்கண்ணன் சவால் விடுத்தார். பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குப்பை அள்ளுவது இல்லை, வடிகால் தூய்மை செய்வது இல்லை, சுகாதார பணியாளர்கள், அலுவலர்கள் இதனை கண்டுகொள்வது இல்லை. என புகார் கூறினார்கள்.

விஜய்கண்ணன் (நகராட்சி தலைவர்):கவுன்சிலர்கள், பொதுமக்கள் நான் போகும் இடமெல்லாம் குப்பை அகற்றுவது இல்லை என தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். சுகாதாரத்துறை செயல்படாத துறையாக உள்ளது. ஓவர்சீர் பொறுப்பில் உள்ளவர் வசம் புகார் சொல்வது தேவையற்றது. எதை பற்றியும் கவலை கொள்ளாமல் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள்.இவ்வாறாக விவாதம் நடைபெற்றது..



Tags

Next Story