அரசு பள்ளி மாணவிக்கு நகராட்சி தலைவர் பாராட்டு

அரசு பள்ளி மாணவிக்கு  நகராட்சி தலைவர்  பாராட்டு
X

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற குமாரபாளையம் நகராட்சி பள்ளி மாணவி லோகிதாவை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பாராட்டினார்.

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற குமாரபாளையம் நகராட்சி பள்ளி மாணவிக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற குமாரபாளையம் நகராட்சி பள்ளி மாணவிக்கு நகராட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தமிழ் வழி கல்வியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் லோகிதா என்னும் மாணவி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றார். பள்ளியின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் மாணவிக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

தேசிய திறனாய்வு போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு4 வருடத்திற்கு (9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )மாதம் தலா ரூபாய் 1000 வீதம் மொத்தம் 48 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இந்நிகழ்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், கவுன்சிலர் இனியா ராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன், ஜூல்பிகார்அலி, பாலாஜி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

தமிழக அரசு சில வருடங்களாகவே பள்ளிக் கல்வித்துறையில் அதிரடியான மாற்றங்களை புகுந்தி வருகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் முதல் மதிப்பெண், இரண்டாம் மதிப்பெண் என மதிப்பெண்ணை வைத்து தரம் பிரிப்பதை மாற்றி அமைத்தது. இந்த முறையால் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை அனைத்து தரப்பினரும் வரவேற்றனர். இதை போலவே இப்போது ஆங்கில மொழியில் சரளமாக பேச வேண்டும் என்பதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கையேட்டை தயாரித்துள்ளது.

இந்தக் கையேடுகள் ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் 2ஆம் பருவத்தில் 12 பாட வேளைகளிலும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 பாடவேளைகளிலும் வழங்கப்படும். ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி சார்ந்த வகுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


Tags

Next Story
ai in future agriculture