சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன்:நகராட்சி தலைவர் அறிவிப்பு

சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன்:நகராட்சி தலைவர் அறிவிப்பு
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்குதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்குதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்குதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்குதல் குறித்த ஆலோசனை கூட்டம் ஆணையாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பேசியதாவது:பி.எம். ஸ்வான் நிதி திட்டத்தின் கீழ், குமாரபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் வங்கி கடன் பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், சாலையோர வியாபாரிகள் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், கைப்பேசி எண் , மற்றும் கடையின் புகைப்படம் அடங்கிய விபரங்களுடன் பிரதி வாரம் புதன்கிழமை மற்றும் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் நகராட்சி அலுவலகத்தில்

நகர அமைப்பு ஆய்வாளரிடம் பதிவு செய்ய கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வங்கியின் மூலம் கடன் வழங்க நகராட்சி நிர்வாகம் பரிந்துரையின் பேரில் வங்கிக் கடன் வழங்கப்படும் என்றார் அவர்.

இதில் பொறியாளர் ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் ஜான்சி ராணி, நகராட்சி அதிகாரிகள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





Tags

Next Story
ai in future agriculture