அதிமுகவில் சேருகிறாரா? நகராட்சி தலைவர்..!

அதிமுகவில்  சேருகிறாரா? நகராட்சி தலைவர்..!
X

பைல் படம்

குமாரபாளையம் தி.மு.க. நகராட்சி தலைவர் அதிமுகவில் சேரவுள்ள தாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தி.மு.க. நகராட்சி தலைவர் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக செய்தி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் நகராட்சி தலைவராக விஜய்கண்ணன் தற்போது செயல்பட்டு வருகிறார். இவர் சுயேட்சையாக போட்டியிட்டு, சுயேச்சை, மற்றும் இதர கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் குமாரபாளையம் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். நகர தி.மு.க. செயலர் செல்வம் ஒரு அணியாகவும், விஜய்கண்ணன் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும் செயல்பட்டனர். அதன் பின் நாமக்கல் மாவட்ட செயலராக மதுரா செந்தில் பொறுப்பேற்ற பின் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார்.

அனைத்து நிகழ்ச்சியிலும் ஒன்றாக பங்கேற்று வந்தனர். சமீபத்தில் கட்சியினருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி நிர்வாகியாக நகராட்சி தலைவர் விஜய்கண்ணனுக்கு வழங்கப்பட்டதாகவும், அதனால் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டதால், அ.தி.மு.க.வில் சேர இருப்பதாக பரவலாக பேச்சு அடிபடுகிறது. இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

சமீபத்தில் குமாரபாளையம் நகர செயலர் பதவி இரண்டாக பிரிக்கப்பட்டு, மூத்த நிர்வாகி ஞானசேகரனுக்கு ஒரு பகுதி நகர பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டது. இது கிடைக்கும் என விஜய்கண்ணன் எதிர் பார்த்ததாக கூறப்படுகிறது. அந்த பதவி கிடைக்காததால் அதிருப்தி நிலவி வந்தது. பட்டும் படாமலும் இருந்து வந்த இந்த பிரச்னை பெரிதாகியது. அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!