மழை நீர் பாதித்த பகுதியில் சேர்மன் ஆய்வு

மழை நீர் பாதித்த பகுதியில் சேர்மன் ஆய்வு
X

குமாரபாளையம் மழை நீர் பாதிப்பு பகுதியில் சேர்மன் ஆய்வு செய்தார். 

குமாரபாளையம் மழை நீர் பாதிப்பு பகுதியில் சேர்மன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் ஏரி நேற்றுமுன்தினம் பெய்த மழையில் நிரம்பி உபரி நீர் கம்பன் நகர், பெரியார் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முருங்கைக்காடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நுழைந்தது. இந்த பகுதிகளில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்து பெண்கள் பள்ளி, வீடுகளில் உள்ள நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டன. தாசில்தார் தமிழரசி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மழை வெள்ள சேத மதிப்பு கணக்கீடு செய்தனர். இவருடன் கமிஷனர் (பொ) ராஜேந்திரன், கவுன்சிலர் ஜேம்ஸ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!