சிறுமி கூட்டு பாலியல் வழக்கில் தாயும் கைது

சிறுமி கூட்டு பாலியல் வழக்கில் தாயும் கைது
X
சிறுமி கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே 14வயது சிறுமி கூட்டு பாலியல் செய்யப்பட்ட வழக்கில் அவரது தாயும் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுமியின் தாயை விசாரித்த போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாயை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான தாய் உள்பட 12 பேரும் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து நீதிபதி 12 பேரையும் சேலம் மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டார். சிறுமி பலாத்கார வழக்கில் தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம், குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!