குமாரபாளையம் சிறுமி பாலியல் கொடுமை : குழந்தைகள் ஆணையம் விசாரணை
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன்
குமாரபாளையம் சிறுமி கூட்டு பாலியல் கொடுமை விவகாரத்தை தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை செய்ய உள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த வட்டமலை பகுதி தறித்தொழிலாளியின் 14 வயது மகள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானார். அந்த வழக்கில் அவரது தாய் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து குழந்தைகள் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த பாலியல் புகாரை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை அமர்வு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அந்த அமர்வில் ராமராஜ், மல்லிகை ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
நாளை இந்த அமர்வு குமாரபாளையம் வர உள்ளது. திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு குறித்து அறிந்துகொள்ள வருகிறார்கள் என்று தெரிகிறது. அன்று காலை 11.30 மணிக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு ஆணையம் அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையில் சைல்டுலைன் நிர்வாகி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர், பாதுகாப்பு இல்ல அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் சிறுமி பாலியல் கொடுமை குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu