அரசு மருத்துவமனைக்கு நாற்காலி, ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கிய மக்கள் நீதி மய்யம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிளாஸ்டிக் நாற்காலிகளை நன்கொடையாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர்
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜி.ஹெச்.க்கு 10 சேர்கள் மற்றும் ஆதரவற்றோர் மையத்தில் அன்னதானம் வழங்கினர்.
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நகர செயலராக சரவணன் பணியாற்றி வந்தார். உடல்நலமில்லாமல் கடந்த ஆண்டு இறந்தார். இவரது நினைவுநாளையொட்டி மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு 10 சேர்கள் வழங்கப்பட்டன. தலைமை டாக்டர் பாரதி இதனை பெற்றுகொண்டார். தலைமை நர்ஸ் சாந்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பாசம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சரவணன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மல்லிகா, உஷா, செந்தில், நந்தகுமார், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், மோகன்ராஜ், உள்பட சரவணன் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
குமாரபாளையத்தில் மின்மாற்றியை இடம் மாற்றம் செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு
குமாரபாளையத்தில் மின்மாற்றியை மாற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் அய்யாத்துரையிடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டு சேலம் மெயின் ரோடு, முருகன் இரும்புக்கடை பின்புறம் முருகன் கோவில் எதிரில், டிரான்ஸ்பார்மர் சாக்கடைக்குள் பதிந்துள்ளது. பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் அருகில் வீடுகள் மற்றும் கடைகள் இருப்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காதிருக்க உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களின் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.மக்கள் நீதி மய்யம் மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu