நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
X

பைல் படம்

குமாரபாளையத்தில் மத்திய அரசைக்கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமாரபாளையத்தில் மத்திய அரசைக்கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3 குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு எதிராக தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தியில் மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 3 சட்டங்களின் பெயரை மாற்றி இந்தியில் பெயர் வைப்பதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய உரிமையியல் சட்டம் ஆகியவற்றை இந்தியில் பெயர்மாற்றம் செய்வதை கண்டித்து, தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் பரிந்துரையின் பேரில், குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இன்று முதல் ஆக. 31 வரை, தினமும் காலை 10: மணி முதல் 10:30 மணி வரை மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் தீனதயாள்ராஜ், இணை செயலர் ஐயப்பன், செயற்குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.



Tags

Next Story
ai in future agriculture