நில முகவர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

நில முகவர் சங்க புதிய  நிர்வாகிகள் தேர்வு
X

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் நில முகவர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக சின்னசாமி, செயலராக செல்லமுத்து, பொருளராக சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நிலம் விற்பனை சம்பந்தமான கமிஷன் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,

2010, 2013 ஆண்டுகளில் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத்தில் அனுமதி பெற்ற இடங்களில் பிளாட் போட்ட பின், தற்போது டி.டி.சி.பி. அனுமதி பெற வேண்டும் என்பதால், விற்பனை முடங்கும் நிலை ஏற்பட்டதால், முன்பு கொடுத்த அனுமதியை அங்கீகாரம் செய்து, இனி வரும் காலங்களில் டி.டி.சி.பி. அனுமதி பெற்று நிலம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நில விற்பனைக்கு விதிக்கும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும், டி.டி.சி.பி. அனுமதி பெற மாவட்ட வருவாய்த்துறை அனுமதி மறுப்பதை விடுத்து, தரிசு நில அனுமதி வழங்க, பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Tags

Next Story
ai in future agriculture