குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேரோட்டம் காேலாகலம்
குமாரபாளையத்தில் காளியம்மன் கோயிலில் முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.
குமாரபாளையம் காளியம்மன் கோயிலில் அம்மன் திருக்கல்யாணம் மற்றும் முதல் நாள் தேரோட்டம் நடைபெற்றது.
காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி நேற்று காலை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாக்குழு தலைவர் ரகுநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வேதாந்த மட குரு சித்ருபா சுவாமிகள், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், கிருஷ்ணவேணி, சியாமளா, பரமேஸ்வரி, வேல்முருகன், தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், நிர்வாகி செல்வராஜ், காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
காளியம்மன் கோவில் முதல் நாள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. ராஜா வீதி, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை வழியாக சென்று புத்தர் வீதியில் நிறைவு பெற்றது. இன்று புத்தர் வீதியில் இருந்து ராஜா வீதி வழியாக காளியம்மன் கோவில் வளாகத்தில் தேர் நிலை அடைய உள்ளது. எண்ணற்ற பக்தர்கள் வடம் பிடித்து ஓம் சக்தி, பராசக்தி என்ற சரண கோஷத்துடன் தேரை இழுத்து வந்தனர். வழி நெடுக பெண்கள் சாலையில் தண்ணீர் ஊற்றி சாலையை சுத்தம் செய்ததுடன், தேங்காய், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பூஜை சாமான்கள் கொடுத்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். போலீசார் போக்குவரத்தை மாற்றியமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை அகற்றி, தேர் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். தேர் சென்ற பகுதியில் உடனே மின் இணைப்பு வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu