குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி வாண வேடிக்கை, திருவீதி உலா

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி வாண வேடிக்கை, திருவீதி உலா
X

குமாரபாளையம் காளியம்மன் மகா குண்டம், தேர்த் திருவிழாவையொட்டி வாண வேடிக்கை நடைபெற்றது. உள்படம்: அம்மன் அலங்கார திருவீதி உலா.

குமாரபாளையம் காளியம்மன் மகா குண்டம், தேர்த்திருவிழாவையொட்டி வாண வேடிக்கை, அம்மன் அலங்கார திருவீதி உலா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம் தேர்த்திருவிழாவில் பூ மிதித்தல், 2 நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று (11ம் தேதி) வாண வேடிக்கை மற்றும் அம்மன் அலங்கார திருவீதி உலா நடைபெற்றது.

காவிரி ஆற்றில் நடைபெற்ற வாண வேடிக்கையை பார்க்க பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். விதவிதமான் வெடிகள் வெடிக்கும் போது உற்சாக மிகுதியில் பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். 7:15 மணிக்கு தொடங்கிய வாண வேடிக்கை 8:30 மணி வரை நீடித்தது.

இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது.

Tags

Next Story