குமாரபாளையம் சேர்மன் முயற்சியால் புதுப்பொலிவு பெறும் வாரச்சந்தை

குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் திறந்தவெளி வாரச்சந்தை வளாகம்.
குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் வாரச்சந்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த வாரச்சந்தை குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொது மக்களுக்கு தங்களது உணவுப் பொருட்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் சந்தையாக விளங்குகிறது.
பழ வகைகள், காய்கறிகள், தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இந்த சந்தையில் சுமார் 200 கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.திறந்தவெளி சந்தையாக உள்ள காரணத்தினால் மழைக்காலங்களில் வாரசந்தை வளாகம் சேரும் சகதியுமாக ஆகிவிடுகிறது. . இந்த வார சந்தையில் கான்கிரீட் தளம் மற்றும் மேற்கூரைகள் அமைத்து அனைத்து வசதிகளுடன் கூடிய வளாகம் அமைக்க வேண்டி, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை மற்றும் வரைபடங்கள் அனுப்பி வைத்தார்.
குமாரபாளையம் வாரச்சந்தை வளாகம் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu