அரசு பள்ளியில் உலக தாய்மொழி தினம்

குமாரபாளையம் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் மேற்கு காலனி மற்றும் நாராயண நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் பிற மொழி கலக்காமல் தாய் மொழியில் உரையாடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் தலைமை ஆசிரியைகள் கவுசல்யாமணி, பாரதி, நிர்வாகிகள் தீனா, சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.
உலக தாய்மொழி தினம் குறித்து தமிழ்ஆர்வலர்கள் கூறியதாவது:பன்னாட்டுத் தாய்மொழி நாள் பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது மொழி, பண்பாட்டு பன்மையையும் உலகின் பல மொழிகளையும் மேம்படுத்தலுக்கான விழிப்புணர்வை வென்றெடுக்க கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டம் முதலில் யுனெசுக்கோவால் 1999 ஆம் ஆண்டு நவம்பர் 17 இல் அறிவிக்கப்பட்டது.இது பன்னாட்டுத் தீர்மானம் வழி பன்னாட்டுப் பொதுமன்றில் முறையாக 2002 இல் ஏற்கப்பட்டது.தாய்மொழி நாள் என்பது பன்னாட்டவையில் 2007 ஆம் ஆண்டு மே 16 இல் முன்னெடுத்த தீர்மானத்தின்படி "உலக மக்கள் மொழிகளைப் பேணி வளர்த்தலையும் பாதுகாத்தலையும் வென்றெடுக்கும் விரிவான முன்முயற்சியின்" ஒரு பகுதியே ஆகும். இத்தீர்மானம் 2008 ஆம் ஆண்டை பன்னாட்டு மொழிகளுக்கான ஆண்டாகவும் அறிவித்தது.
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாக்கித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெஸ்கோ) அமைப்பின் 1999, பிப்ரவரி 21 அன்று பொதுமன்ற மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெஸ்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 -ஆம் நாளை பன்னாட்டு தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது.
தற்போது வங்காளத் தேசத்தில் பன்னாட்டுத் தாய்மொழி நாள் ஒரு பொது விடுமுறை நாளாகவே கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் கனடாவில் வாங்கூரில் வாழும் வங்க தேச நாட்டவரால் முதலில் முன்மொழியப்பட்டது. இவர்கள் 1998 ஜனவரி 9 -இல் கோபி ஆன்னுக்கு ஒரு கடிதம் வழி உலக மொழிகள் மறையாமல் காத்திட பன்னாட்டுத் தாய்மொழி நாளைக் கொண்டாடுவதற்கான தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொண்டனர். இதற்கு இரபிக்குல் 1952 இல் நடந்த மொழி இயக்கத்தின்போது டாக்காவில் கொல்லப்பட்ட பிப்ரவரி 21 ஆம் நாளை முன்மொழிந்தார்.இவ்வாறு அவர்கள் கூறினர்:
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu