கபடி போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

கபடி போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
X

கபடி போட்டியில் கலந்துகொண்ட குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சீனியர் பிரிவை சேர்ந்த கபாடி மாணவர்கள் பள்ளிபாளையம் வட்டார அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டார அளவிலான கபடி போட்டி வெப்படை அருகே உள்ள வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் பள்ளிபாளையம் வட்டார அளவிலான அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என பல்வேறு பள்ளிகளுக்கு இடையே நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பள்ளிபாளையம் அரசு உதவி பெறும் எஸ்.பி.பி. பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இவற்றில் 12க்கு 34 என்ற கணக்கில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்.

போட்டியில் கேப்டன் கிருஷ்ணா மற்றும் துணை கேப்டன் கோகுல், கார்த்தி, மதன் , சுனில், மோகன், இளவரசன், சந்தோஷ், சுகானா, ரஜினிகாந்த், ஜெகதீஷ். போன்ற மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இவற்றில் கிருஷ்ணா கோகுல் மதன் சந்தோஷ் ஐயர் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு மற்றும் உடற்கல்வி இயக்குனர் சிவசுப்பிரமணியம், ஆசிரியர்கள் மணிகண்டன், கவிராஜ், என். சி. சி அலுவலர் அந்தோணிசாமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் அன்பரசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், வட்டார விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அப்துல்சமத் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.

Tags

Next Story