அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை

அரசு கலை கல்லூரியில்  மாணவர் சேர்க்கை
X

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் முதல்வர் ரேணுகா தலைமையில் மாணவர் சேர்க்கை நடந்தது.

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இது குறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா தமது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள இளநிலை பட்டப்படிப்பிற்கான மானவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர் களுக்கு, அழைப்பாணை, மாணவர்கள் விண்ணப்பித்த போது, வழங்கிய அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கப்படும். மே 29ல் காலை சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படை, உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்றனர். .

ஜூன் 2ல் பி.எஸ்.சி. கணிதவியல், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி.இயற்பியல் மற்றும் பி.எஸ்.சி. வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்தது.

ஜூன் 5ல், காலை 09:30 மணிக்கு பி.காம்., வணிகவியல், பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல், மற்றும் பி.ஏ. பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

ஜூன் 6ல், காலை 09:30 மணிக்கு மொழிப்பாடங்களுக்கான பி.ஏ.தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் உரிய நாட்களில், உரிய நேரத்தில், கல்லூரி சேர்க்கைக்குரிய சான்றிதழ்களுடன் மற்றும் கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக கல்லூரிக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் https//www.gasckpm.org/ வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் , மாணவர் சேர்க்கைக்கு வரும் போது, பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும். தரவரிசை பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags

Next Story
ai in future agriculture