குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் கருத்தரங்கம்

குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் கருத்தரங்கம்
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் பேராசிரியர் பால்ராஜ் பேசினார்.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மகேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பால்ராஜ் பங்கேற்று, துறை சம்பந்தமான பயனுள்ள கருத்துகளை எடுத்துரைத்தார். மாணவ, மாணவியர் களுக்கு வினாடி வினா போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பேராசிரியர்கள் சரவணாதேவி, கண்ணன், அன்புமணி, காயத்ரி, கீர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியர்கள், உயர்கல்வி பயில, வழிகாட்டுதல் களப்பயணம் என்ற அடிப்படையில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியர் 100 பேர், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்தனர். இவர்களை அரசு கல்லூரி மாணவ, மாணவியர் நடனத்துடன் வரவேற்றனர்.

கல்லூரி முதல்வர் ரேணுகா அனைவருக்கும் மலர்கள் கொடுத்து வரவேற்றார். கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், எதற்காக இந்த பயணம்? என்பது குறித்து முதல்வர் ரேணுகா விளக்கி பேசினார். அதன் பின் வகுப்பறையில் பாடங்கள் நடத்தும் முறை, நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை நேரில் அழைத்து சென்று காட்டினர். இது குறித்து முதல்வர் ரேணுகா கூறியதாவது:

அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு கல்லூரியில் உள்ள வசதிகள், கற்றுக்கொடுக்கும் தன்மைகள் குறித்து அறியச்செய்து, அவர்களை அரசு கல்லூரியில் உயர்கல்வி பயில வைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வு அரசு உத்திரவின்படி நடத்தப்பட்டது. பேராசிரியர்கள் ரகுபதி, கீர்த்தனா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே நான் முதல்வன் இணைய முகப்பின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும்.

நான் முதல்வன் இணைய முகப்பில் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களும், இந்நிறுவனங்கள் வாயிலாக பெறக்கூடிய 300க்கும் மேற்பட்ட தொழில் சார்ந்த வழிகாட்டுதல்களும் அடங்கும். நாடு முழுவதும் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயர்கல்விக்கான உதவித் தொகைகளின் தகவல்களும் இந்த இணைய முகப்பில் உள்ளன.

நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ முக்கிய நோக்கம்‌, ஆண்டுக்குப்‌ பத்து இலட்சம்‌ இளைஞர்களைப்‌ படிப்பில்‌, அறிவில்‌, சிந்தனையில்‌, ஆற்றலில்‌, திறமையில்‌ மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல்‌ ஆகும்‌.இந்தத்‌ திட்டத்தின்‌ சிறப்பம்சமானது, அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின்‌ தனித்‌ திறமைகளை அடையாளம்‌ கண்டு அதனை மேலும்‌ ஊக்குவிப்பது ஆகும்‌. அடுத்தடுத்து அவர்கள்‌ என்ன படிக்கலாம்‌, எங்கு படிக்கலாம்‌, எப்படிப்‌ படிக்கலாம்‌ என்றும்‌ வழிகாட்டப்படும்‌. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.




Tags

Next Story
ai in future agriculture