மீண்டும் அரசியல் களத்திற்கு வந்த முன்னாள் நகராட்சி தலைவர்

அண்ணா பிறந்த நாள்விழாவில் பங்கேற்ற முன்னாள் அதிமுக நகராட்சி தலைவர் தனசேகரன்
குமாரபாளையம் முன்னாள் அ.தி.மு.க. நகராட்சி தலைவர் மீண்டும் வந்ததால் அரசியல் களம் சுறுசுறுப்பு ஏற்பட்டது.
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளை யொட்டி புதிய தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த முன்னாள் அ.தி.மு.க. நகராட்சி தலைவர் தனசேகரன் அண்ணா பிறந்த நாள்விழாவில் பங்கேற்றார். நகர செயலர் உள்ளிட்ட நகர, வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் என அனைத்து தரப்பினரும் இவரை வரவேற்றனர்.
முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன், அ.தி.மு.க.வில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அப்போதைய நகர செயலர் நாகராஜனுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி சீட் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த தனசேகரன், சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வெடுத்த நிலையில் மீண்டும் அரசியல் களத்திற்கு இவர் வந்தது அனைவைரையும் மகிழ்ச்சியடைய செய்தது.
காரணம் அதுவரை குமாரபாளையம் நகராட்சி தலைவராக அ.தி.மு.க.வினர் யாரும் வந்தது இல்லை. முதன்முறையாக இவர் வெற்றி பெற்றதும், முன்னாள் அமைச்சர் தங்கமணியை சந்தித்து வாழ்த்து பெற்று, அதன் பின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று, அதன் பின்தான் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மாவட்ட செயலர் நாகராஜன் தலைமையில் கட்சி அலுவலகம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் சீனிவாசன், லோகநாதன், பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
தி.மு.க. சார்பில் நகர செயலர்கள் செல்வம், ஞானசேகரன் தலைமையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் இதே அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
ம.தி.மு.க. சார்பில் நகர செயலர் நீலகண்டன் தலைமையில் இதே அன்ன சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி புதிய தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில், முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் பங்கேற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu