குமாரபாளையம் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு   ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
X

காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் பாதுகாப்பு பணிகளுக்காக காவிரி பழைய பாலம் பகுதியில் குமாரபாளையம் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

குமாரபாளையம் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக காவிரி பழைய பாலம் பகுதியில் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்குவதற்கு ஏற்ப பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!