குமாரபாளையத்தில் தி.மு.க. வார்டு செயலர்கள் கூட்டம்!
படவிளக்கம் : குமாரபாளையம் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்த வார்டு செயலர்கள் கூட்டத்தில் நகரரட்சி தலைவர் விஜய்கண்ணன் பேசினார்.
தி.மு.க. வார்டு செயலர்கள் கூட்டம்
குமாரபாளையம் தி.மு.க. கட்சி அலுவலகத்தில் வார்டு செயலர்கள் கூட்டம் நடந்தது.
தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி,
குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க சார்பில் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் கூட்டம் 1வது வார்டு செயலாளர் ராமசாமி தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் மற்றும் நகர வடக்கு தி.மு.க. செயலர் விஜய்கண்ணன் பங்கேற்று, பாக முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கி பேசியதாவது;
வருகிற 4,5,18,19 தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சேர்க்கை முகாமில் வார்டு செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி புதிய வாக்காளர்கள் சேர்க்கவும், இடம்பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கம் மற்றும் வாக்காளர்களின் பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளை வாக்காளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் குமாரபாளையம் நகரத்தில் கழகத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைகளை பூர்த்தி செய்து கொடுத்து அதன் மூலம் கழகத்திற்கும் கழகத் தலைவருக்கும் மக்கள் ஆதரவு கிடைக்க பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நகர மன்றத் துணைத் தலைவர் வெங்கடேசன், வடக்கு நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஜேம்ஸ், கந்தசாமி, ராஜ்குமார், பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu