குமாரபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

குமாரபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
X

குமாரபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கரைக்க நேற்று கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம். காவிரி ஆற்றில் வெள்ளம் வருவதால் பாதுகாப்புடன் சிலைகள் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறினார்.

குமாரபாளையம் பகுதி மட்டுமில்லாமல் வட்டமலை, வளையக்காரனூர், நேரு நகர், அருவங்காடு, முனியப்பன் கோவில், பச்சாம்பாளையம், சங்ககிரி, உள்ளிட்ட பல பகுதியில் இருந்தும் சிலைகள் கொண்டு வந்து கரைப்பது வழக்கம். இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்படும் என்பதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை முதல் இரவு வரை விநாயகர் கொலு சிலைகள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture