குமாரபாளையம்: மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமாரபாளையம்: மரம் வெட்டியவர்கள் மீது   நடவடிக்கை  எடுக்க கோரிக்கை
X

குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் நன்கு வளர்ந்த பெரிய மரம் வெட்டப்பட்டு உள்ளது.

Today Crime News in Tamil - குமாரபாளையத்தில் மரம் வெட்டுவோர் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என மரம் வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Today Crime News in Tamil - குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் நன்கு வளர்ந்த பெரிய மரம் ஒன்றினை அப்பகுதியினர் வெட்டியுள்ளனர். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பள்ளி குழந்தைகள் தங்கள் பிறந்த நாளில் மரக்கன்று நட வைப்போம் என கூறுவதுடன், கோவில் விழாக்களில், திருமண விழாக்களில் மரம் வளர்போர் மரக்கன்று நடுதலை பற்றி எடுத்துரைத்து மரக்கன்று இலவசமாக வழங்கியும் வருகிறார்கள். அரசு அனுமதி இல்லாமல் மரம் வெட்டுதல் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்தும் இது போல் விதி மீறி மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் நீதி மன்றம் நிகழ்விலும் குமாரபாளையம் நீதி மன்ற வளாகத்தில் நீதிபதி மாலதி தலைமையில் 25 மரக்கன்றுகள் நடும்பணி துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து மரம் வளர்ப்போர் அமைப்பினர் கூறும்போது

சில நாட்கள் முன்பு தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் புருஷோத்தம பெருமாள் கோவில் அருகே பெரிய மரம் வெட்டப்பட்டது. வருவாய்த்துறையினர் நேரில் வந்து விசாரித்து, விசாரணை அறிக்கை ஆர்.டி.ஒ.க்கு அனுப்பி வைத்தனர். அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுத்திட காலதாமதம் ஆகி வருகிறது. இதனால் மரம் வெட்டுவோர் அச்சமின்றி தொடர்ந்து மரங்களை வெட்டி வருகின்றனர். இது போல் மரங்கள் வெட்டும் நபர்கள் மீது உடனுக்குடன் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!