மார்க்கெட் பணியை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு எம்.பி. சின்ராஜ் அறிவுறுத்தல்

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகள் குறித்து எம்.பி. சின்ராஜ் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகளகுறித்து பற்றி எம்.பி. சின்ராஜ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குமாரபாளையம் நகராட்சி சார்பில் இடைப்பாடி சாலையில் ஜி.ஹெச். அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இது அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கட்டிடங்கள் மிகவும் சேதமானது. இதனை புதுப்பிக்கும் பணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 278.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மார்க்கெட் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்தததுடன், இது குறித்து வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனை கண்ட எம்.பி. சின்ராஜ் நேற்று குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு நேரில் வந்து, நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கட்டுமான பணி குறித்தும் புகார்களின் உண்மை தன்மை பற்றியும் கேட்டறிந்தார்.
கட்டுமான பணிகள் குறித்து சில ஆலோசனைகள் தெரிவித்து அதனை செயல்படுத்திட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். உதவி பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu