குமாரபாளையம் கூலித்தொழிலாளி மர்மச்சாவு

குமாரபாளையம் கூலித்தொழிலாளி மர்மச்சாவு
X
குமாரபாளையத்தில் நடந்த பல்வேறு குற்றச்சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

குமாரபாளையம் அருகே கூலித்தொழிலாளி மர்ம மரணம்: போலீஸார் விசாரணை

குமாரபாளையம் அருகே சானார்பாளையம் பகுதியில் வசிப்பவர் கண்ணுசாமி, 55. கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று காலை 08:30 மணியளவில், சானார்பாளையம் மதுக்கடைக்கு செல்லும் வழியில், மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்து, இவரது மனைவி சாந்தி, 49, நேரில் சென்று, ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தார். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் சாந்தி புகார் கொடுத்துள்ளார். குமாரபாளையம் போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

டிவைடர் மீது டூவீலர் மோதி ஓட்டல் அதிபர் மரணம்

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பிரபா மெஸ் எனும் பெயரில் ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மாலை 02:20 மணியளவில், கடைக்கு கடைக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு, தனது பஜாஜ் டிஸ்கவர் வாகனத்தில் சரவணா தியேட்டர் அருகே வந்துகொண்டிருந்தார். முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது, சாலையின் நடுவில் வைக்கப்பட்ட டிவைடரில் மோதி, பலத்த காயமடைந்தார். சிகிச்சைகாக, குமாரபாளையம், ஈரோடு மற்றும் மீண்டும் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்ப்பதற்காக வந்த போது, வழியில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

--

Tags

Next Story