டூவீலர்- டெம்போ வேன் மோதிய விபத்தில் வட மாநிலத்தவர் 2 பேர் உயிரிழப்பு

டூவீலர்- டெம்போ வேன் மோதிய விபத்தில் வட மாநிலத்தவர் 2 பேர் உயிரிழப்பு
X

குமாரபாளையம் அருகே டிவைடர் மீது கார் ஏறி நின்றது.

குமாரபாளையத்தில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

குமாரபாளையம் அருகே டிவைடர் மீது ஏறி நின்ற கார்

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் அருகே நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில் ஹோண்டா கார் ஒன்று, தன் கட்டுப்பாட்டை இழந்து டிவைடர் மீது ஏறி நின்றது. காரில் வந்த இருவர் படுகாயமடைந்ததால், குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

பணி செய்யும் போது மயங்கி விழுந்து கூலி பெண் தொழிலாளி மரணம்

குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் மணி, 61. தனியார் விசைத்தறி பட்டறை கூலித் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மயங்கி விழுந்தார். பட்டறை உரிமையாளர், இவரது கணவர் சண்முகத்திற்கு தகவல் தெரிவிக்க, நேரில் வந்த சன்முகம், இவரை சிகிச்சைக்காக ஈரோடு ஜி.ஹெச்.க்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். இவரை பரிசோதித்த டாக்டர் யார் வழியில் இறந்ததாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளிபாளையம் அருகே வாய்த்தகராறில் அரிவாள் வெட்டு

மொளசி அருகே கோரைக்குட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்குமார், 20. பெயிண்டர். இவரது உறவினர் சுரேஷ்குமார், 28. ஆடி 18 பண்டிகைக்கு அப்பா ராஜூ மற்றும் பாட்டியை பார்க்க மும்பையில் இருந்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணியளவில், தனக்கு பெண் பார்த்து தர சொல்லி, அருள்குமாரிடம், சுரேஷ்குமார் கேட்டார். நான் என்ன மாமா வேலையா பார்க்கிறேன், என்று அருள்குமார் கூறியதாக தெரிகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகில் இருந்த புல் வெட்டும் அருவாள் எடுத்து, அருள்குமார் தலையில் சுரேஷ்குமார், வெட்ட, அருள்குமார் பலத்த காயமடைந்தார்.இது குறித்து வழக்குபதிவு செய்த மொளசி போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

டூவீலர், டெம்போ மோதிய விபத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த மாமியார், மருமகன் மரணம்

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர் காஸி, 30. இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஜவுளி தயாரிப்பு ஆலையில் குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் சேலம் மாவட்டம் அரியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்து விட்டு, தனது மாமியார் தாரா காஸி, 50, மற்றும் மனைவி பாத்திமா ஆகிய மூவரும் டூவீலரில் பெருந்துறை நோக்கி, காலை சேலம், கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது குமாரபாளையம் அருகே நேரு நகர் தேசிய நெடுஞ்சாலை பிரிவில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குமாரபாளையம் போலீசார் மூன்று பேரையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிய நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வட மாநில தொழிலாளி ஜஹாங்கீர் காஸி, மற்றும் அவரது மாமியார் தாரா காஸி ஆகியோர் உயிரிழந்தனர். பாத்திமா அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


-

Tags

Next Story
ai in future agriculture