/* */

விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தவர் கைது

குமாரபாளையத்தில் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தவர் கைது

HIGHLIGHTS

விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்தவர் கைது
X

பைல் படம்

குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்ற நபர் கைது .

குமாரபாளையம் நகரில் பகுதியில் பல இடங்களில் மது விற்பதாக தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. சந்தியா, எஸ்.ஐ. தங்கவடிவேல் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். கத்தேரி பிரிவு பசுமை தாபா அருகில் நேற்று மாலை 02:15 மணியளவில் ஒருவர் மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். விசாரனையில் அவர் வட்டமலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்தது. இவர் மீது வழக்குப்பதிவு செய்து இவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

மூதாட்டி மீது மொபட்டில் மோதிய முதியவர் கைது

குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் மீனாட்சி, 58. விசைத்தறி கூலி. அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 70. வீட்டில் இருந்து வருகிறார். நேற்று காலை 05:30 மணியளவில் அதே பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மாரிமுத்து, தனது டி.வி.எஸ்.. எக்ஸல் வாகனத்தில் இவருக்கு பின்னால் வந்து மோதியதில், மீனாட்சி பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாரிமுத்துவை கைது செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 20 March 2023 4:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!