ஆன் லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை

ஆன் லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை
X

பைல் படம்

பள்ளிபாளையம் அருகே ஆன் லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை

கள் விற்பனைசெய்த நபர் கைது

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் அனுமதி இல்லாமல் கள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று பார்த்த போது, அங்கு பழனிசாமி, 64, என்பவர், அனுமதி இல்லாமல், கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

குடிப்பழக்கத்தால் விஷமருந்தி வாட்ச்மேன் பலி

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மாணிக்கம், 67. ஈரோடு மாவட்டம், காஞ்சிகோயில் பகுதியில் வாட்ச்மேன் வேலை. குடிப்பழக்கம் உள்ளவர். வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தினர் திட்டியுள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை 01:00 மணியளவில் குடித்து விட்டு, வீட்டின் முன்பு படுத்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று படுக்கச்சொல்லி அவரது குடும்பத்தினர் சொல்லியுள்ளனர். வீட்டின் உள்ளே வந்து படுத்தவர் வாந்தி எடுக்க, அவரிடம் கேட்ட போது, விஷமருந்தி விட்டதாக கூறியுள்ளார். உடனே இவரை குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் மாலை 03:45 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆன் லைன் ரம்மி விளையாட்டால் இளைஞர் தற்கொலை

பள்ளிபாளையம் ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்கான்( 22.), செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆன் லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. ஈரோட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, காவிரி ஆற்றின் பாலத்தின் மீது, தனது டூவேலரை நிறுத்தி விட்டு, காவிரி ஆற்றில் குதித்து உள்ளார். அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் வெப்படை மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சுமார் இரண்டு மணி நேரம் போராடி வாலிபரின் உடலை மீட்டனர். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் என்.ஹெச். சாலை பகுதியில், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலிருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் எரிபொருள் மூலப்பொருளான எத்தனால் எரிபொருளை, சுமார் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாரம் ஏற்றியவாறு, கோவை மாவட்டம், இருகூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்தது. லாரியில் உள்ள எத்தனால் எளிதில் தீப்பிடிக்கும் என்பதால் சங்ககிரி, வெப்படை, தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ பிடிக்காமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். விபத்து குறித்து வெப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கிரேன் வைத்து தூக்க முயற்சிக்கும் போது, இரும்பு உராய்வின் போது சிறு தீப்பொறி ஏற்பட்டாலும், சுமார் மூன்று கிலோ மீட்டர் ஆய் பாதிப்பு இருக்கும் என வல்லுனர்கள் கூறியுள்ளனர். வெளிச்சம் குறைவானதால் நாளை காலை மீட்பு பணிகள் துவங்கும் என அதிகாரிகள் கூறினார்கள். அவ்வழியே வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.



Tags

Next Story
ai in future agriculture