குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

குமாரபாளையத்தில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்.

குமாரபாளையத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்கள், அரசின் வழிகாட்டுதலின்படி இயங்குகின்றனவா என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த இரு மாதங்களாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் செயல்படவில்லை. கடந்த ஜூன் 28 முதல், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சிறு விசைத்தறி கூடங்கள் மீண்டும் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசைத்தறிகள் செயல்பட துவங்கின. ஆயினும் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் ஆகியவை பின்பற்ற வேண்டும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், குமாரபாளையத்தில் உள்ள விசைத்தறி கூடங்களில் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, அங்கிருந்த விசைத்தறி தொழிலாளர்களிடமும், உரிமையாளர்களிடமும் அவர் அறிவுறித்தினார். குமாரபாளையம் ஆர்.டி.ஒ. இளவரசி, தாசில்தார் தங்கம் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார் ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், செந்தில்குமார், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture