குருத்தோலை ஞாயிறு: திரளான கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்

குருத்தோலை ஞாயிறு: திரளான  கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்
X

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு குமாரபாளையத்தில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி கிறித்தவர்கள்  ஊர்வலம் வந்தனர்.

குமாரபாளையத்தில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி கிறிஸ்தவர்கள் ஜெபமாலை அன்னை ஆலயத்துக்கு பவனி வந்தனர்

குருத்தோலை ஞாயிறையொட்டி குமாரபாளையத்தில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி வந்தனர்.

குமாரபாளையம் நடராஜா நகர், ஜெபமாலை அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலயம் முன்பிருந்து நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகர், பெரியார் நகர், ஓலப்பாளையம், சேலம் சாலை, வழியாக வந்து கோவிலில் ஊர்வலம் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறும், இயேசு புகழ் பாடியவாறும் வந்தனர். இதில் கிறிஸ்தவர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

குருத்தோலை ஞாயிறு குறித்து கிறிஸ்தவர்கள் கூறியதாவது: அக்காலத்தில் யூத சமூக மரபுப்படி ஆளுநர்கள், அரசர்கள், தலைமைக் குருக்கள் மட்டுமே கழுதை மேல் அமர்ந்து நகர் வலம் வருதல், கம்பள வரவேற்பு பெறுதல் ஆகிய உயர் பெருமை நிலையைப் பெற்றிருந்தனர். மக்களும் இம்மூவர்களுக்கு மட்டுமே ஒலிவ் மர குருத்து ஏந்தி வரவேற்பு அளிப்பர். ஆனால் தச்சரின் மகனான இயேசு, மக்கள் செல்வாக்கு மிகுதியால் கழுதை மேல் அமர்ந்து கம்பள வரவேற்புடன் தலைநகர் எருசலேமில் அரசரைப் போல நுழைந்தார். எருசலேம் மக்களும் அவருக்கு அரச மரியாதையுடன் ஒலிவ் மர குருத்து ஏந்தி ஆடம்பரமான வரவேற்பு அளித்தனர்.

இது அந்த கால அரசியல் சூழலில் சாதாரண செயல் அல்ல. ஏற்கெனவே தலைமைக் குருக்கள் இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய தகுந்த காரணத்தை தேடிக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் அவர் மக்கள் ஆதரவுடன் எருசலேம் நகரில் நுழைந்ததை இவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இயேசுவின் மீதான தலைமைக் குருக்கள், பரிசேயர், அரசியல் தலைவர்களின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

இந்நிகழ்விற்கு பின்னர் இயேசுவே கொலை செய்யும் முயற்சியை வேகப்படுத்தினர். ஆனால் இயேசு தான் பாடுகள் பட்டு கொடிய சிலுவை மரணம் அடைவதற்காகத் தான் எருசலேம் வருகிறோம் என்பதையும், மக்களுடன் தனது இறுதி பயணம் இது தான் என்பதையும் உணர்ந்திருந்தார். இந்நிகழ்வு நடந்த அதே வாரத்தில், இயேசு கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டார்.

யோவான் நற்செய்திப்படி மக்கள் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்கு எதிர்கொண்டுபோனார்கள். இவ்வாறு, குருத்தோலைகளை அசைத்து, வழியில் துணிகளை விரித்து, இலைதழைகளைப் பரப்புவது ஓர் ஆழ்ந்த பொருள் படைத்த செயலாக மாறியது. இயேசுவை மக்கள் கடவுள் பெயரால் வந்த மெசியா என்றும் தங்கள் அரசர் என்றும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றாலும் விரைவிலேயே அவர் இறக்க வேண்டும் என்று குரல் எழுப்பவும் தயங்கவில்லை. இயேசுவை இன்று தம் மெசியாவாக ஏற்பவர்களும் அவரை மாட்சியுடைய மன்னராக மட்டுமே பார்க்காமல், துன்பங்கள் மற்றும் மரணம் வழியாக உலகிற்குப் புத்துயிர் வழங்கியவராகக் காண வேண்டும் என்பது இந்நிகழ்ச்சியின் பொருள் ஆகும்.



Tags

Next Story
ai in future agriculture