குமாரபாளையம் செல்போன் கடை திருட்டு: சி.சி.டிவி காட்சி மூலம் 3 பேர் கைது

குமாரபாளையம்  செல்போன் கடை திருட்டு:   சி.சி.டிவி காட்சி மூலம் 3 பேர் கைது
X
குமாரபாளையம் செல்போன் கடையில் திருடிய 3 திருடர்கள் சிசிடிவி காட்சி மூலம் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் எதிரில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பிரபு சங்கர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 22 ஆம் தேதி வழக்கம்போல் பணிகளை முடித்துக்கொண்டு இரவு கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். மீண்டும் காலையில் கடையைத் திறந்து பார்த்த பொழுது கடையின் மேற்கூரையை உடைத்து, கடையில் இருந்த செல்போன்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது தனியார் செல்போன் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை பிடித்து விசாரிக்கும் போது சேலத்தைச் சேர்ந்த ஜெகதீசன், களக்காடு அரசு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், முருங்கை காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் செல்போன் கடையில் திருடியதை ஒப்புக்கொண்டனர் அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் செய்து,.15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!