குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் டி.ஆர்.ஓ. ஆய்வு

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் டி.ஆர்.ஓ. ஆய்வு
X

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் டி.ஆர்.ஓ. கதிரேசன் தலைமையில் போர்டு வைக்கப்பட்டது.

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதியில் டி.ஆர்.ஓ. ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை வருவாய்த்துறையினர் செய்து வருகிறார்கள்.

காவிரியில் குளிக்க, துணி துவைக்க தடை செய்யப்படுவதாகவும், மீறி செயல்படுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் போர்டு வைத்தனர். இதனை டி.ஆர்.ஒ. கதிரேசன், தாசில்தார் தமிழரசி, சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டனர்.

மேலும் டி.ஆர்.ஓ. கதிரேசன் கரையோர பகுதி மக்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், யாரும் பயப்பட வேண்டாம் எனவும் ஆறுதல் கூறினார். இதில் கவுன்சிலர் கனகலட்சுமி, பாண்டி செல்வி, அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், கிருஷ்ணவேணி, நந்தினிதேவி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஐயப்பன், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ. முருகன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business