கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அ.தி.மு.க. வினர் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியதால் குமாரபாளையம் பா.ஜ.க.வினர் மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதை பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
அ.தி.மு.க. வினர் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியதால் குமாரபாளையம் பா.ஜ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சில நாட்களாக பா.ஜ.க., அ.தி.மு.க.வினரிடையே முட்டல் மோதல் அதிருப்தி நிலை நீடித்து வந்தது. சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க. வுடனான உறவு முறிந்தது என முடிவு செய்யப்பட்டது. இதனால் மாநிலம் முழுதும் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய நிலையில், அதன் ஒரு கட்டமாக குமாரபாளையத்தில் பா.ஜ.க. மாவட்ட பொது செயலர் சரவணராஜன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நிர்வாகிகள் கொண்டாடினர். வக்கீல் தங்கவேல், சேகர், ராஜா, இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஒரே கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையேயான மோதல்போக்கு இன்னும் ஓயந்தபாடில்லை. கடந்த மார்ச் மாதத்தில் அ.தி.மு.க-வின் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவை, `ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். அப்போதே அ.தி.மு.க-பா.ஜ.க மோதல் கடுமையாக முற்றி, பல களேபரங்கள் நிகழ்ந்து, ஒரு வழியாக பா.ஜ.க டெல்லி மேலிடத்தால் சமாதானம் செய்து வைக்கப்பட்டத
இந்த நிலையில், மீண்டும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை பற்றி அவதூறு கருத்தைத் தெரிவிக்க, கொந்தளித்துவிட்டது அண்ணா தி.மு.க. குறிப்பாக, ``பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை, இந்த நிலைப்பாட்டில் இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லை!" என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். அதேபோல, ``எந்தக் கட்சியிடமும் அடிபணிந்துபோக வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை; அண்ணா பற்றி சொன்ன கருத்தை திரும்பப் பெறப் போவதில்லை!" என வழக்கம்போல பேசத் தொடங்கியிருக்கிறார் அண்ணாமலை.
அ.தி.மு.க-பா.ஜ.க மோதல் பொதுவெளியில் சீரியஸாக சென்றுகொண்டிருக்க, `இது சண்டையல்ல; வெறும் நாடகம்!' என தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டுத் தாளிக்கின்றன. அந்த வகையில் அ.தி.மு.க - பா.ஜ.க மோதல் பற்றி தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இங்கு பா.ஜ.க-வினரும், அ.தி.மு.க-வினரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, ஊழல் வழக்கில் தன்னை தண்டித்துவிடக் கூடாது என்பதற்காக, எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். இரண்டு நாள்களுக்கு முன்பு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எதற்காக பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்தனர் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அ.தி.மு.க-பா.ஜ.க மோதல் ஒரு உட்கட்சிப் பிரச்னைதான். சும்மா அப்பப்போ சண்டை போட்டுக்கொள்வது போல் நடிப்பார்கள். நாம் காமெடி சேனலைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு போய்விட வேண்டியதுதான் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu