JKKN கல்வி நிறுவன இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்..!

திறப்புவிழாவுக்கு தயாராக இருக்கும் குமாரபாளையம் தாலுகா அலுவலகம்.
JKKN கல்வி நிறுவனத்தின் இயக்குனர் ஓம் சரவணா, குமாரபாளையம் பகுதி கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறார். பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக நம்ம குமாரபாளையம் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார். இந்த அமைப்பு குமாரபாளையம் பகுதி வளர்ச்சிபெற வேண்டும் என்று ஒரே நோக்கில் தொடங்கப்பட்ட அமைப்பு ஆகும்.
சுற்றுச் சூழல், சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் நகர வளர்ச்சி போன்ற அடிப்படை கருத்துக்களை கொண்டு செயல்பட்டுவரும் அமைப்பாகும்.
குமாரபாளையம் தனி தாலுகாவாக உருவாக வேண்டும் என்று நம்ம குமாரபாளையம் அமைப்பின் தலைவர் ஓம் சரவணா முயற்சி எடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு முன்மொழியப்பட்ட தீர்மானத்தை தமிழக அரசிடம் கோரிக்கையாக வைத்திருந்தார். இதற்கு அனைத்து பொது நல அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்கியதுடன் அதில் உறுதியாகவும் இருந்தனர்.
அதன் விளைவாக அந்த கோரிக்கையை ஏற்று தனி தாலுகாவாக குமாரபாளையம் அறிவிக்கப்பட்டது. அதற்கு சான்றாக நாளை (27ம் தேதி)புதிய தாலுகா கட்டிடம் உதயமாக உள்ளது. நம்ம குமாரபாளையம் அமைப்பின் தலைவர் ஓம் சரவணா, ஒட்டுமொத்த குமாரபாளையம் மக்கள் சார்பாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மேலும், JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனரும் நம்ம குமாரபாளையம் அமைப்பின் தலைவருமான ஓம் சரவணாவுக்கு குமாரபாளையம் அனைத்து பொதுநல அமைப்புகளின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu