அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச ஹோமியோபதி சிகிச்சை முகாம்

குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச ஹோமியோபதி முகாம் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச ஹோமியோபதி முகாம் சங்க தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ முகாமினை துவக்கி வைத்தார்.
சிறுவர் சிறுமிகளுக்கு பயம், ஞாபக மறதி, விரல் சூப்புதல், நகம் கடித்தல், சாக்பீஸ் சுண்ணாம்பு சாப்பிடுதல் போன்ற பழக்கங்கள் இருந்து விடுபடுவதற்காக ஹோமியோபதி இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது ஹோமியோபதி டாக்டர்கள் சண்முகசுந்தரம் மற்றும் தமிழியன் ஆகியோர் சிகிச்சை வழங்கினர். இதில் பெரியவர்கள் உள்பட 110 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.
ஓமியோபதி என்பது ஒரு மாற்று மருத்துவ முறையாகும்... இது மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட போலி அறிவியல் கோட்பாடுகளை கொண்ட ஒரு மருத்துவமுறை ஆகும். ஓமியோபதி மருத்துவமுறை, ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்ற கோட்பாட்டின்படி இயங்கும் முறையாகும்.
இந்த கருத்துருவை முழுமையைகக் கொண்ட உலகளாவிய சிகிச்சை முறையே ஓமியோபதி ஆகும். குறிப்பாக ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, ஆசியாவை உள்ளடக்கிய 85 நாடுகளுக்கும் மேலானவற்றில் இம்முறை நடைமுறையில் உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஓமியோபதி மருந்துச் சந்தை பல மில்லியன் டாலர் தொழிற்சாலையாகும். ஓமியோபதி மருந்துகள் தாவரம், விலங்குப் பொருட்கள், தாதுக்கள் அல்லது சில மந்தப் பொருட்களில் இருந்தும் உருவாக்கப்படுகின்றன என்று ஹோமியோபதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu