சொன்னீங்களே செஞ்சீஞ்களா என்ற முழக்கத்துடன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சொன்னீங்களே செஞ்சீஞ்களா என்ற முழக்கத்துடன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில், பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, குமாரபாளையத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருந்தது. எனினும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவ்வகையில், குமாரபாளையம் பகுதி அ.தி.மு.க.வினர், பள்ளிபாளையம் பிரிவில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதிமுக நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நகர துணை செயலர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் குமணன் பாலசுப்ரமணி, தனசேகர், பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

ஒன்றிய அதிமுக செயலர் குமரேசன் தலைமையில் ராஜம் தியேட்டர் முன்பும், பள்ளிபாளையத்தில் பஸ் ஸ்டாண்ட், பகுதியில் நகர செயலர் வெள்ளிங்கிரி, ஒன்றிய நிர்வாகி செந்தில் தலைமையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
future of ai in retail