குமாரபாளையத்தில் 2 கார்கள் மோதல்: பஸ்சுக்கு காத்திருந்த பெண் காயம்

குமாரபாளையத்தில் 2  கார்கள் மோதல்:  பஸ்சுக்கு காத்திருந்த பெண் காயம்
X

குமாரபாளையம் அருகே, கத்தேரி பிரிவு பகுதியில், விபத்தில் சேதமடைந்த கார்.

குமாரபாளையம் அருகே, இரு கார்கள் மோதிய விபத்தில், பஸ்சுக்கு காத்திருந்த பெண் படுகாயமடைந்தார்.

சேலம் பள்ளபட்டியை சேர்ந்தவர் சுதாகர், 40. ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில், ஆர்.ஐ. பயிற்சி செய்து வருகிறார். இவரும், திருவண்ணாமலையை சேர்ந்த இவரது நண்பர் ராஜா, 35, என்பவருடன், சேலம் கோவை புறவழிச்சாலையில், பவானி சாகர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

நேற்றிரவு 09:50 மணியளவில், குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில், குமாரபாளையம் வருவதற்காக, காரை திருப்பினார். அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி பொன்னையா, 42, என்பவர் வந்த கார், சுதாகரின் கார் மீது வேகமாக மோதியது. இதில் சுதாகர், ராஜா பலத்த காயமும், பொன்னையா லேசான காயமும் அடைந்தனர். இரு கார்களும் சேதமடைந்தன.

விபத்தில் சேதமடைந்த மற்றொரு கார்.

அந்த நேரத்தில், ஆத்தூரை சேர்ந்த ரேணுகா, 22, என்பவர், விபத்து நடந்த இடத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். இரு கார்களும் மோதிய விபத்தில் ரேணுகாவும் பலத்த காயமடைந்து ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சுதாகர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் , திருவண்ணாமலைக்கு ராஜா அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்