குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி, உதை

குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி, உதை
X
குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).
குமாரபாளையத்தில் பொது வழியில் காரை நிறுத்தியவரை தட்டி கேட்டவருக்கு அடி, உதை விழுந்தது.

குமாரபாளையம் கலைமகள் தெருவில் வசிப்பவர் மாணிக்கம் (வயது 36.) விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே வீதியில் வீட்டுக்கு வந்த போது, அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார்,( 26, )பொது வழியில் காரை நிறுத்திக்கொண்டிருந்தார். ஏன் இப்படி செய்கிறீர்கள்? என மாணிக்கம் கேட்க, அப்படிதான் செய்வேண்டா, என்று கூறியதுடன் கட்டையால் மாணிக்கத்தை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த மாணிக்கம் இவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது